Affichage des articles dont le libellé est வெப்பமயமாதல். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வெப்பமயமாதல். Afficher tous les articles

dimanche 26 janvier 2014

புவி வெப்பமயமாதல் -2

புவியினுடையவளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்தல் புவி வெப்பமடைதல் எனப்படும். அதாவது இயற்கையான காரணிகளினாலும் மனித நடவடிக்கைகளினாலும் வளிமண்டலத்தின்வெப்பம் அதிகரிப்பதனால் புவியின் வெப்பநிலை அதிகரித்தல் புவிவெப்பமடைதல் எனப்படுகின்றது.


  பச்சைவீட்டு விளைவில் செல்வாக்குச் செலுத்தும் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்தல்இந்தப் புவிவெப்பமடைவதற்கு பிரதான காரணமாகும். பச்சைவீட்டு வாயுக்களான CO2, CH4, N2O, NOx போன்றவற்றின்செறிவு வளிமண்டலத்தில் அதிகரிக்கப்படுவதனால் வெப்பசக்தியை புவிக்கு உறிஞ்சி வைத்துக் கொள்ளும்திறனும் அதிகரிக்கின்றது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கின்றது. கடந்த 2000 – 2012 ஆம் ஆண்டு வரையிலான12 வருட காலப்பகுதியினுள் 0.8 OC வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4 OC வெப்பநிலைஅதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

   வளிமண்டலத்தில்அதிகளவில் பச்சைவீட்டு வாயுக்களான காபனீரொட்சைட், மெதேன், நைதரசன் ஒட்சைட்டுஆகிய வாயுக்களின் செறிவு அதிகரிக்கின்றபோது அவைவெப்பநிலையை அதிகரிப்பதில் செல்வாகுக்குச் செலுத்தும். அண்மைக்காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு ஆரம்பத்தில் இருந்தததைவிட அதிகரித்துவருவதனை அது பற்றிய அவதானிப்புகள்எடுத்துக் காட்டியுள்ளன.

  காபனீரொட்சைட்டின்செறிவு வருடமொன்றிற்கு ஏறக்குறை 0.2 சதவீதத்தினால் அதிகரித்து வருகின்றது. காபனீரொட்சைட்டில் ஏற்படுகின்ற 10 சதவீதமான அதிகரிப்பு உலகின் சராசரி மேற்பரப்புவெப்பநிலையின் 0.03 சதவீதமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டில் வலளிமண்டலத்தில் உள்ளகாபனீரொட்சைட்டின் செறிவு ஏறக்குறைய 284 ppm(parts per million) ஆக இருந்தது. 1974 இல்இது ஏறக்குறைய 330 ppm ஆகக் காணப்பட்டது. 2000 ஆம்ஆண்டில் இது 379 ppm ஆக அதிகரித்துள்ளது. 2010 ஆண்டில் ஜீலைமாத அவதானிப்புகளின்படி 390.9 ppm ஆக அதிகரித்துள்ளது. 2012 ஜீலை மாதத்தில்  395.77 ppm ஆகவும் உள்ளது.

lundi 6 janvier 2014

புவி வெப்பமயமாதல்-1

புவி வெப்பமயமாதல்   

புவியின் சராசரி வெப்பநிலை படிப்படியாக 
உயர்வதை "புவி வெப்பமயமாதல்" என்கிறோம். 
இது பசுமை வாயுக்கள் (CO2-82%, Methane 0%,Nitrous 
Oxide-5% and Fluorinated Gas-3%) புவியில் 
அதிகமாவதால் இந்த புவி மயமாதல் மாற்றம் 
நிகழ்கிறது,மேலும், இது ஒரு நிரந்தரமாற்றம் ஆகும். இதனால்  இடத்துக்கு தக்கவாறு பாதிப்புகள் இருக்கும். 

1. 

புவியில் தாறுமாறான, அதிக வெப்ப நிலை 

2. 

பனி பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் 

3.

 பருவநிலை மாற்றம் ஏற்பட்டு கட்டுகடங்காத, 
வழக்கத்திற்கு மாறான அதிக மழை, அதிக வெயில் 

4. 
பாலைவனமாதல், கடும் வறட்சி 

5. 

வெள்ளம், வெப்ப காற்று, கடும் பனி பொழிவு 
மேற்கண்ட விளைவுகளால் மனிதன் உட்பட 

அனைத்து உயிரினங்களும் உயிரிழக்கும் அபாயம் நேரிடலாம்!! 

இதனால்தான் உலக நாடுகள் எல்லாம் 

புகையில்லா பசுமை திட்டத்தை முன் வைக்கின்றன. 
வாகன புகைவிடுதல் மற்றும் மாசு 
அடைந்த காற்றில்  உள்ளது. 

இதன் தாக்கம் இப்போது சென்னையில் தெளிவாக தெரிகிறது. வழக்கத்திற்கு அதிக மழை, உடன் 

ஆக்கிரமிப்பு செய்யப்பட நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், மடுவு எல்லாம் மறைந்து, புது 
புது ஏரியாக்கள் உருவானதன் விளைவு இந்த 
வெள்ள பெருக்கு. புகை விடும் வாகனங்களையும், 
குப்பை, நிலக்கரி எரியூட்டுவதையும்
குறைப்போம் இப்புவியை காப்போம், எதிகால தலைமுறைக்கு பசுமையான புவியை 
பரிசளிப்போம்