சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 - சூலை 10, 1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க்
கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலி என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார்
வழித்தோன்றலாய் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர்
சோமசுந்தரப் புலவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளையின் புதல்வி சின்னம்மையை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது
உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு
வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத் திறமையும் பெற்றார்.
தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி
முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார். பதிகம்,ஊஞ்சல்என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம் நான்மணி மாலை அட்டகம் அந்தாதி சிலேடை வெண்பா திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம் தில்லை அந்தாதி கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.சோமசுந்தரப்புலவர் இயற்றிய நாடகம் உயிரிளங்குமரன்
Affichage des articles dont le libellé est புலவர். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est புலவர். Afficher tous les articles
vendredi 17 janvier 2014
Inscription à :
Articles (Atom)