Affichage des articles dont le libellé est நீர். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நீர். Afficher tous les articles

mardi 11 février 2014

நீர்

நீர் (water) என்பது H
2
O
 என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் பங்கீட்டுவலுப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. நீரானது உலக உயிரினங்களின் நிலவுகைக்குத் தேவையானதாகும். திட்ட வெப்ப ழுத்தத்தில் நீர் ஒரு திரவம் ஆக இருந்தாலும், இது புவியில்திட வடிவில் பனியாகவும், மற்றும் வளிம வடிவில் நீராவி ஆகவும் காணப்படுகிறது.
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது.[2] நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக்கவிகைகளிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன.
நீரானது ஆவியாதல், நீராவிப்போக்கு(ட்ரான்ஸ்பிரேஷன்), ஆவிஊட்டளவு (இவாப்போட்ரான்ஸ்பிரேஷன்), குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல்(பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஆஃப்)எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன.
மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும்(ஜிடிபி)இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது.[5] 2025 ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர். பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.