கப்பல், ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்கக்கூடும். மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது. உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு, பாய்மரங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன.
கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன.
கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire
Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.