பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண,புத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம் : அதாவது, சமண, புத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire
Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.