பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும்
ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால்
அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும்
வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில்
உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது
பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும்
தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.
பழங்களை இரு வகையாகப் பாகுபடுத்தலாம் அவையாவன சதைப்பிடிப்பான பழங்கள், உலர்ந்த பழங்கள் என்பனவாகும்.
பழங்கள் உடலுக்கு ரொம்ப நல்லது என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பழத்தில் என்னென்ன சத்துகள் இருக்கிறது கேட்டால் கூட சொல்லி விடுவார்கள். ஆனால் எந்த பழத்தில் என்ன சத்திருக்கின்றது என்று கேட்டால் உங்களால் கூறமுடியுமா?? நமது உடலுக்கு கல்சியம், இரும்புசத்து , பொஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.

Aucun commentaire:
Enregistrer un commentaire
Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.