mercredi 15 janvier 2014

உணவும் உடல் நலமும்

நாம், சிலரைச் சில உணவுகளை உண்ணுமாறு வேண்டுகின்ற பொழுது,இது எனக்கு வேண்டாம் என்பார்கள். ஏன் என்று கேட்டால், என்உடலுக்கு ஒத்துக்கொள்ளாது; சாப்பிட்டால் செரிக்காது என்றோ எனக்கு அந்த உணவு ஒவ்வாமை (Allergy) உடையது என்றோகுறிப்பிடுவார்கள். வேறு சிலர் எனக்கு நீரிழிவு (Diabetics) நோய்எனவே இந்த உணவை உண்ணக் கூடாது என்பார்கள்.உடலுக்குஒவ்வாது மாறுபாடு உடைய உணவை உண்டால், வயிற்றுவலிபோன்ற நோய் வரும் அல்லது இருக்கும் நோயை அது மிகுதியாக்கும் என்று அஞ்சுபவர்களே இவ்வாறு கூறுகின் றார்கள்.எனவே தான் உடல் நலத்தில் கவனம் உடையவர் உடலுக்குப் பொருந்தாத உணவுகள் உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள் இந்த இந்த உணவுகள் தம் உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பவைஎன்று எவ்வாறு அறிந்தார்கள்? இன்றைய அறிவியல் வளர்ச்சியால்ஏற்பட்ட மருத்துவச் சோதனைகளின் வாயிலாக, இந்த இந்த உணவுகளை உண்ணக் கூடாது. இவை இவை உடலுக்குத் தீங்கு விளைவிப் பவை என்பனவற்றைக் கண்டுபிடித்தார்கள். இந்தக் கண்டுபிடிப்புகள் வாயிலாகவே அறிந்தார்கள். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர், இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார். அறிவியல் சோதனைகளின் முடிவு  அல்லது பயன்களை நன்கு அறியும் ஆற்றல் பெற்றிருக்கிறார்.எனவேதான், இந்த அறிவியல் உண்மையினை,தனது உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது என்கிறார் வள்ளுவர்.அறிவியல் சோதனைகளின் வாயிலாகக் கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகளைத் தன் அறிவியல் புலமையால் வெளியிட்டுள்ளார் வள்ளுவர். அதோடு, அறிவியல் பின்புலங்கொண்ட ஒரு மருத்துவனைப்போல் உண்ண வேண்டிய உணவைப் பற்றியும் அறிவுரை கூறியுள்ளார்.நாம் உண்ட உணவு செரித்த பின்னரே மறுபடியும் உண்ண வேண்டும். அது நோயில் இருந்து நம்மைப் காப்பாற்றும் என்று கூறிய வள்ளுவர்; செரித்த பின் உண்டாலும் அளவோடுதான் உண்ண வேண்டும் என்று கூறுகிறார். அளவு என்றால் எந்த அளவைப் பின்பற்றுவது என்ற ஒரு வினா எழலாம். ஒவ்வொருவரது வயதிற்கும், உடலமைப்பிற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் உணவின் அளவு அமைந்திருக்கும். ஆறு மாத குழந்தை உண்ணும்உணவின் அளவு வேறு, பதினாறு வயது இளைஞன் உண்ணும் உணவின் அளவு வேறு, அறுபது வயது முதியவர் உண்ணும் உணவின் அளவு வேறு. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரனார்என்னும் புலவர், உண்ணும் போது ஏதோ ஓர் அளவை அடிப்படையாக வைக்கவேண்டும் என்ற உணர்வு பண்டைத் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது. அளவோடுதான் உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி இருந்திருக்கிறது என்பது புலப்படும். இத்தகைய விழிப்புணர்ச்சிப் பெற்ற சமுதாயத்தில் வாழ்ந்த வள்ளுவர், அளவோடு உண்ணவேண்டிய தேவையையும், அளவுக்கு அதிகமாக உண்டால் வரும் தீமையினையும் நன்கு அறிந்திருக்கிறார், எனவே,உண்ட உணவு செரித்த பிறகு, பசியினது அளவும்,செரிமானமும் நிலையும் நன்கு அறிந்து அளவோடு உண்ண வேண்டும். அவ்வாறு ஒருவன் செய்வானேயானால் அவன் பெற்ற உடலை நீண்ட நாட்கள் பாதுகாத்துக் கொண்டு வாழ முடியும்.இதற்கு முன்னர் உணவு செரித்த பின்னர் உண்பதினால் ஏற்படும் நன்மையை விளக்கினார். இந்தக் குறளில், செரித்த உணவை அளவோடு உண்ணுவதினால் ஏற்படும் நன்மையைக் கூறுகிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிதியார், இக்குறளுக்கு உரையெழுதும் போது, ஒருவர் உண்ணும் போது, அரை வயிற்றிற்கு உணவு உண்ண வேண்டும். கால் பங்கு அளவுக்கு நீர் அருந்த வேண்டும். எஞ்சிய கால்பகுதியை வெறுமையாக விட்டு விட வேண்டும். என, உணவு உண்ண வேண்டிய அளவைக் குறிப்பிடுகிறார். இம்முறை பரிதியார் காலத்திற்கும் அதற்கு முந்தியும் உடல் நலம் கருதியோர் பின்பற்றிய முறையாக இருக்கலாம்.யூதர்களின் புனித நூலாகக் கருதப்படும் தல்மத் (Talmud) என்னும் நூலில், ஒருவன், வயிற்றின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உணவை உண்ண வேண்டும், மூன்றில் ஒரு பங்குத் தண்ணீரை அருந்த வேண்டும், எஞ்சிய மூன்றில் ஒரு பங்கைக் காற்றின் இயக்கத்திற்கு விட்டு விட வேண்டும் என்று கூறுகிறது. மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து என்ன புலப்படுகிறது? உண்ணவதிலும் சில நெறி முறைகளைப் பின்பற்றி இ ருக்கின்றனர். அளவோடு உண்ணவேண்டும். அது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நோய் நம்மை எளிதில் அணுகாது என்ற ஓர் எண்ணம் அல்லது நம்பிக்கை இருந்திருக்கிறது. மேலும், மருத்துவர்கள், நமக்கு மருத்துவ அறிவுரை கூறும் போது, நாம் உண்ண வேண்டிய உணவு வகைகளைக் குறிப்பிடும் பொழுதும் உண்ண வேண்டிய அளவைக்குறிப்பிடுகின்றனர். ஒரு குவளை  (Cup) பால் அருந்துங்கள். இரண்டுதேநீர் கரண்டி (Tea spoon) தேன் அருந்துங்கள் என்றும்குறிப்பிடுகின்றனர். அறிவியல் சார்ந்த இந்த எண்ணம் (Awareness)வள்ளுவருக்கும் இருந்திருக்கிறது. அதை ஓர் அறிவுரையாக இங்குநம் உடலில் வரும் நோய்களுக்கும் மருத்துவர்கள் பல காரணங்கள் கூறுவார்கள். அவற்றில் உண்ட உணவு செரிக்காமை.செரிக்காமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்தஉணவாக இருந்தாலும், அந்த உணவை உண்டபின் அதுசெரிக்காமல், மேலும் மேலும் உணவை உண்ணுபவர்களுக்கு தாம்உண்ட உணவால் எந்தப் பயனும் ஏற்படாது. உடலுக்கு உரியசத்தாகவும் அது அமையாது. செரித்த உணவே, உடலுக்குப்பயன்படும் சத்தாகப் பயன்படும். ஒரு நிலையில் செரிக்காமல்உண்ணும் உணவால் உடலுக்கு எந்தவித பயனும் இல்லை. இவ்வாறுசெரிக்காமல் உண்டால், உடம்பில் எந்தவித ஊட்டச் சக்தியும்இல்லாமல் உடல் பெலவீனமாகும். உடல் பலவீனமானால் எந்தநோயும் உடலை எளிதில் பாதிக்கும். ஒரு தடவை உண்ட உணவு செரிக்காம லிருக்கும் பொழுதே இன்னொரு முறை உண்டால் வயிற்றுவலியோ, வயிற்றுப் போக்கோ, வாந்தியோ ஏற்படும். எனவே தான்வள்ளுவர், அருந்திய உணவு செரித்த பின்னர் அடுத்த முறை உணவை உண்ணுங்கள். அவ்வாறு உண்டால் உங்களுக்கு நோயும்வராது, நீங்கள் மருந்தையும் உண்ண வேண்டிய தேவை இல்லை என்கிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.