mardi 14 janvier 2014

உலககால்பந்துபோட்டி

உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெற வில்லை. 2014 ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஜேர்மனி   வெற்றியீட்டியது .

ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக ஒரு அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் வகையில் உலகக்கோப்பை காற்பந்து போட்டியானது வடிவமைக்கப் படுகிறது. 

இப்போட்டிகள் உலககோப்பை இறுதியாட்டம் என்றழைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் போட்டியை நடத்தும் நாடு உட்பட பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும், அர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை இரண்டு முறையும், இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.

உலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. செர்மனியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக பதிவாகியுள்ளது. .

உருசியா, கத்தார் ஆகிய நாடுகளில் முறையே 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.