என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும்,மனித உரிமைகளை மேம்படுத்தி கல்வி , தொழில்நுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே.
உலக அமைதி என்பது கருத்தளவில் நிகழலாம் என்றாலும், நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.மனிதர்கள் தம் இயல்பிலேயே வன்முறைச் சார்புடையவர்கள் என்றும், பகுத்தறிவு கொண்டவர்கள் என்னும் முறையில் சில சூழ்நிலைகளில் அவர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவார்கள் என்றும் இக்கருத்து உள்ளது.
மேற்கூறிய கருத்துக்கு மாறான ஒரு கருத்தும் உள்ளது. அதாவது, போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும். இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது
Aucun commentaire:
Enregistrer un commentaire
Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.