lundi 10 février 2014

வானொலி

1)இலங்கையின் இலத்திரனியல் தொடர்பாடல் துறைசார் வரலாற்றில் மிகப் புராதன ஊடகமாக காணப்படுவது வானொலி ஊடகமே ஆகும்.

2)மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஒரே நேரத்தில் தகவல்களை அதிகளவான மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய வெகுஜன ஊடகமாக வானொலி திகழ்கின்றது.

3)ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

4)ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை´ மற்றும் ´மார்க்கோனி விதி´ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

5)இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ´மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்´, ´வானொலி´ மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது.

6)இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.