dimanche 12 janvier 2014

பாசம்

பாசம் என்பது என்பது "அரிதான ஒருவரின் அல்லது ஒரு பொருளின் பால் மனதாலும் உடலாலும் கொண்ட பற்று"அல்லது பாசம் என்பது எதனையும் மற்றவரிடமிருந்து எதிர்பார்க்காது காட்டும் பேரன்பாகும். எனவே, சில மனவியல் வல்லுநர்கள், இது பற்று, நட்பு, காதல் போன்ற விட அதிக சக்தி வாய்ந்ததென்று பொருந்தியும் காதலினும் சிறிது குறைத்தும் கூறுவர்
  1. தாய் தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
  2. தந்தை தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
  3. மக்கள் தம் பெற்றோரிடம் காட்டும் பாசம்
  4. சகோதர சகோதரி பாசம்
  5. உறவினர் பாசம்
  6. விலங்குகளின் பாசம்
  7. விலங்குகளிடத்து பாசமாயிருத்தல்
  8. இயற்கை மீதான பாசம்
என பல வகைகளில் தாமறியாமலே பாசத்தினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

தன் பாசத்தினைவெளிபடுத்த பின்வரும் பலவகையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
  1. கட்டித்தழுவல்
  2. ஆரத்தழுவல்
  3. உச்சி நுகர்தல்
  4. முத்தமளித்தல்
  5. தட்டிக் கொடுத்தல்
  6. பாராட்டுதல்
  7. பல செயல்களை செய்தல் (எ-டு: குழந்தைகட்கு தாலாட்டு பாடுதல்)
பாசம் என்ற சொல்லுக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. பாசத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது...ஒருவரை அடித்து திருத்துவதைவிட பாசமாக பேசினாலே போதும் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள் சிலர் பாசமாக பேசுவார்கள்.சிலர் தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்த அன்பளிப்பாக ஏதாவது கொடுப்பார்கள்.

முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் கட்டாயமாக பாசத்துடன் இருக்க வேண்டும்... நம் முன்னோர்கள்காலத்தில் எல்லாம் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பாசத்தைக் காட்டி வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தார்கள்.அதனால் குழந்தைகளுக்கும் அனைவரின் பாசமும் கிடைத்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் தனிக்குடித்தனம் செய்கிறார்கள்.பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தையை வேலைக்காரியிடமோ அல்லது குழந்தைள் காப்பகத்திலோ விட்டுச் செல்கின்றனர். குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைப்பதில்லை. காலையில் வேலைகுச் செல்லும் போது குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது...வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுவதால் அப்பொழுதும் தூங்கிவிடும்.பெற்றோர்களுக்கு குழந்தையுடன் பாசமாக பேசுவதற்கோ, விளையாடுவதற்கோ நேரம் இருப்பதில்லை. பாசத்திற்காக ஏங்க ஆரம்பித்துவிடுகிறது. பெற்றோரை வெறுக்க ஆரம்பித்து விடுகிறது. சில குழந்தைகள் பெற்றோரை மதிப்பதுமில்லை. வளர்ந்து பெரியவனாகின்ற போது கெட்டவர்கள் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அனாதைக் குழந்தைகளைப் பாருங்கள்.அவர்களுக்கெல்லாம் யார் இருக்கிறார்கள்... நாம்தான் அவர்களிடமும் பாசமாக நடந்து கொள்ள வேண்டும்.எல்லோருக்கும் பணம் சம்பாரிப்பது.ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது என்றகுறிக்கோளுடனே இருப்பதால் பாசத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. நாம் எல்லோருடனும் பாசமாக இருந்தால் நமக்கு எப்பொழுது உதவி தேவை என்றாலும் நமக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.ஆகவே எல்லோருடனும் பாசமாக இருங்கள்.பணம்.பணம் என்று அலைவதை விட்டுவிடுங்கள்.அளவான பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.வாழ்க்கைக்கு பணமும் முக்கியம்தான்.. அதைவிட பாசம்தான் முக்கியம் பாசத்தைக் கொண்டு பணத்தை சம்பாதித்துவிடலாம்.ஆனால் பணத்தைக் கொண்டு பாசத்தை சம்பாதிக்க முடியுமா.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.