dimanche 5 janvier 2014

அன்னை தெரேசா




அன்னை தெரேசா (Mother Teresa)

ஆகஸ்ட்  26, 1910 - செப்டம்பர் 5, 1997)
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் 
கொண்டவரும் இந்தியக் குடியுரிமை 
பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்
சகோதரியும் ஆவார். இவரின் 
இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா 
போஜாஜியூ ஆகும். 


ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ
 (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய 
மொழியில்"ரோஜா அரும்பு" என்று
 பொருள்) 1910 ஆகஸ்டு 26 அன்று 
ஓட்டோமான் பேரரசின்அஸ்கப் 
(தற்போது மாக்கடோனியக் 
குடியரசின் ஸ்கோப்ஜே) இல் 
பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி
 பிறந்த போதிலும், அவர் 
திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27
 ஆம் தேதியையே தனது உண்மைப் 
பிறந்தநாளாகக் கருதினார்.
அல்பேனியாவின் ஷ்கோடரில் 
வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல்
 மற்றும் டிரானா போஜாக்சியுவின் 
குழந்தைகளில் இளையவர் இவர்.
அவரது தந்தை அல்பேனிய அரசியலில்
 ஈடுபட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டில், 
ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து 
பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் 
பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு 
ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் 
போது காலமானார். அவரது 
ரணத்திற்குப் பின், அவரது தாயார் 
அவரை நல்லதொரு உரோமன் 
கத்தோலிக்கராக வளர்த்தார்.
ஜோன் கிராப் க்ளூகாசின் வாழ்க்கை 
வரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் 
ஆக்னஸ் மறைப் பணியாளர்களாலும் 
அவர்களது சேவைகளாலும் 
ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் 
துறவறம் புக முடிவு செய்து கொண்டார்.
 தனது பதினெட்டாம் வயதில் அவர் 
வீட்டை விட்டு வெளியேறி, 
லொரேட்டோ சகோதரிகளின் சபையில்
 மறைப்பணியாளராகத் தன்னை 
இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு
 தனது தாயையோ அல்லது உடன்பிறந்த 
சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.
இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக,அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ்.1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அவ்வமயம் மறைப்பணியாளரின் பாதுகாவலரான லிசியே நகரின் தெரேசாவின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937, மே 14 ஆம் தேதி அளித்தார்.
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943-ன் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கை இன்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது

1950 ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தா

வில் பிறர் அன்பின் பணியாளர் என்ற 
கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். 
நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக 
ஏழை எளியோர்களுக்கும்  நோய்வாய்ப்
பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் 
தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் 
இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் 
வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் 
சபையினை நிறுவினார்.

1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக 
சேவகர் எனவும், ஏழைகளுக்கும் 
ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் 
உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு 
மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின்சம்திங்க் 
பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு 
முக்கிய காரணமாகும். 

இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் 
பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த 
குடிமக்கள் விருதான பாரத ரத்னாவிருதினையும் 
பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் 
பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 
நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை
இயக்கிக்கொண்டிருந்தது. 

இதில் எய்ட்ஸ் தொழுநோய் , காசநோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு 
மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், 
குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான 
ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், 
பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் 
அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து 
வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் 
இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் 
கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் 
சட்டர்ஜிபோன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து 
பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. 
இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான 
கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை 
தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் 
கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் 
வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் 
அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில 
செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு 
மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி வி
மர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் 
செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் 
கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன.
இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் 
அருள் சின்னப்பரால்முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர்
 தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்



Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.