vendredi 31 janvier 2014

விவேகானந்தர்-1

ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்... கல்கத்தா...அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். மாப்பிள்ளை விஸ்வநாதன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தான். இருக்காதா பின்னே...! கல்வியும், பணமும் இல்லாத மனைவியர் மீதே பாசம் செலுத்தும் ஆண்மக்களை கொண்டது இந்த புண்ணிய தேசம். மனைவி பிரிந்து விட்டால் சிவபெருமானே மனம் வெம்பிப் போகிறார் என்று கதை சொல்லும் நாடு இது... நிலைமை இப்படி இருக்கும் போது, படித்த ஒருத்தி, அதிலும் செல்வச்சீமாட்டி தனக்கு மனைவியாக வாய்க்கிறாள் என்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகத்தானே இருக்கும்! புவனேஸ்வரி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எல்லாப் பாடல்களையும் ஒரே மூச்சில் சொல்லி விடுவாள்.செல்வ வளமிக்கவள் என்றாலும், எளிமையையே விரும்பினாள். வளமைக்கு மத்தியிலும், தன்னிடம் ஒரு கைத்தொழில் இருக்க வேண்டுமென அவள் நினைத்தாள். அதன் விளைவு அவள் தையல் கற்றுக் கொண்டாள். சமையலில் அவள் ஒரு பெண் நளன். இறைப்பற்று மிக்க அவள், காளிமாதா! என் குடும்பத்துக்கு பொன்னைக் கொடு, பொருளைக் கொடு. என் வக்கீல் கணவருக்கு அதிக வழக்குகளைக் கொடு. அவற்றில் எல்லாம் அவர் ஜெயக்கொடி நாட்டி, உலகப்புகழ் பெறும் வாய்ப்பைக் கொடு, என்று உலகியல் சார்ந்த விஷயமாக கேட்டதே இல்லை.

தாயே! நீ என்ன தர வேண்டுமென நினைக்கிறாயோ அதைக் கொடு. அது துன்பமாகக் கூட இருக்கட்டுமே! அந்த துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் தான் நான் உன்னை அடையமுடியும் என்றால், அதை புன்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னையே உன்னிடம் சமர்ப்பித்த பிறகு, நீ எதைத் தந்தாலும் அது உன்னைச் சார்ந்தது தானே! என்பாள். எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் பாருங்கள்! ஆம்... உலகத்திற்கே ஒளிதரப்போகும் வீரமகனைப் பெறப் போகும் தாயல்லவா அவள்! தைரியம் அவள் உடலோடு கலந்ததாகத்தானே இருக்கும்! விஸ்வநாதன் மட்டுமென்ன...சாதாரணமான மனிதரா? அவரது கதை மிகப்பெரியது. கல்கத்தாவிலேயே புகழ் பெற்ற தத்தர் குடும்பம் அது. அவரது முப்பாட்டனார் ராமமோகன தத்தரே ஒரு வக்கீல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கல்வி என்றால் கிலோ எவ்வளவு என கேட்கப்பட்ட அந்தக் காலத்தில், வக்கீல் குடும்பம் என்றால் கொஞ்ச நஞ்ச மதிப்பா இருந்திருக்க வேண்டும்! ராம மோகன தத்தருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் காளி பிரசாத். இன்னொருவர் துர்கா சரணர். துர்கா சரணரும் தந்தையைப் போலவே மிகப்பெரிய படிப்பாளி. சமஸ்கிருதம், ஆங்கிலம்...ஏன்...பாரசீக மொழியையும் கற்றுக் கொண்டார். அவற்றில் திறம்பட பேசுவார். படிப்பார். எழுதுவார். இவ்வளவும் இருந்தால், அவருக்கு பெண் கொடுக்க ஒரு கூட்டமே மொய்க்காதா? ஆனால், துர்காசரணருக்கோ இல்லற வாழ்வில் நாட்டமில்லை. உறவினர்களும், தந்தையும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். அந்த அன்புப்பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. திருமணமும் முடிந்து விட்டது. அவருக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்தான்.

விஸ்வநாதன் பிறந்த பிறகு, துர்காசரணருக்கு மீண்டும் துறவற எண்ணம் மேலோங்கியது. ஒருநாள் அவர் வீட்டை விட்டு போய்விட்டார். அப்போது விஸ்வநாதனுக்கு வயது மூன்றுதான். கணவனைக் காணவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கலங்காத மனதுடன் மகனை தனியே வளர்த்தாள் சரணரின் மனைவி. ஒருநாள், காசிக்குப் புறப்பட்டாள். கங்கையில் நீராடிவிட்டு, விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். கோயில் படிக்கட்டில் ஏறினாள். திடீரென கண்கள் சுழன்றன. அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தனர். விழித்தாள். அதிர்ந்து விட்டாள். நீங்களா...? ஆம்...தன் முன்னால், கண்ணுக்கு கண்ணான கணவர் துர்காசரணர் இருப்பதைப் பார்த்தாள். குழந்தை விஸ்வநாதன் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தான். துர்காசரணர் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளாலும் ஏனோ பேச முடியவில்லை. கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தது. கணவரைத் தன்னோடு சேர்த்து வைத்த விஸ்வநாதருக்கு மனதால் நன்றி தெரிவித்தாள். தன்னோடு கல்கத்தாவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்தாள். துர்காசரணரின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. மனைவியை நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்தாலும், அவர் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. நீ சுகமா, குழந்தை சுகமா? உறவினர்கள் நலமா? எதையுமே அவர் கேட்கவில்லை.

மாயை..இவ்வுலக வாழ்க்கை மாயை என்று மட்டும் அவளிடம் மெதுவான குரலில் சொன்னார். அதாவது, உன்னை என் மனைவியாக நான் பார்க்கவில்லை. நீ யாரோ ஒரு பெண். உனக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன். மீண்டும் உன்னுடன் சேர்ந்து வாழ என்னால் இயலாது. இல்லறத்தை என் மனம் நாடவில்லை என்பதே அவர் மாயை என்று சொன்னதன் பொருள். இது அவளுக்கும் புரிந்து விட்டது. இவர் இனி இல்லறத்தை நாடமாட்டார். காசியில் துறவியாக இருக்கவே விரும்புகிறார் என்று. நியாயம் தான்...இத்தனை நாளும் இவர் நம்மைப் பிரிந்து துறவியாக வாழ்ந்து விட்டார். இவரைப் பிரிந்ததால் நானும் துறவி போல வாழ்ந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும் அதனால் ஆகப்போவதென்ன? அவருடைய மனநிலையையே நானும் வளர்த்துக் கொள்கிறேன் அவள் அவரிடம் ஏதும் பேசவில்லை. எழுந்தாள். அவரைத் திரும்பியே பார்க்கவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்.


விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து, விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். பழைய நண்பர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த நண்பர். அவ்வளவுதான். உறவுக்காரர்கள் குவிந்து விட்டனர்.துர்கா! நீர் இப்படி செய்தது முறைதானா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும். கைக்குழந்தையான விஸ்வநாதனுமா உம் மனதை விட்டு அகன்று விட்டான்? என்று அர்ச்சனை செய்தனர்.துர்காசரணர் எதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். உறவினர்கள் அவரைக்குண்டுக்கட்டாகத் தூக்கி ஒரு வண்டியில் வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டனர். சரணரின் மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், துர்காசரணரோ மவுனமாகவே இருந்தார்.

குழந்தையைக் கையால் கூடத் தொடவில்லை. மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உறவினர்கள் ஆலோசித்தனர். இப்படி செய்தால் இவர் சரிப்பட்டு வரமாட்டார். இவரை ஒரு அறையில் அடைத்து விடுவோம். இல்லாவிட்டால், இவர் திரும்பவும் காசி, ராமேஸ்வரம் என ஓடிவிடுவார் என்று முடிவெடுத்து, அறையிலும் அடைத்து விட்டனர். உள்ளே சென்ற துர்காசரணர் உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். மூன்றுநாட்களாக பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படவில்லை. சரணரின் மனைவிக்கு பயமாகி விட்டது. என் மீது அன்பு கொண்டு நீங்கள் செய்த காரியத்திற்கு நன்றி. ஆனால், இப்படியே போனால் என் மாங்கல்யத்தையே இழந்து விடுவேன் போலிருக்கிறதே! அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அவர் உயிருடன் இருந்தால் அதுவே போதும். அவரை விட்டு விடுங்கள், என்றாள்.

உறவினர்களுக்கும் அது சரியென்று படவே, அறைக்கதவை திறந்து விட்டனர். அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. கூண்டில் இருந்து விடுபட்ட பறவை போல சென்றவர் தான். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்பதை அவரது மனைவியோ, உறவினர்களோ தங்கள் இறுதிக்காலம் வரை தெரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்படி விஸ்வநாதன், தந்தை முகம் பார்த்தறியாமலே வளர்ந்து விட்டார். அவருக்கும் புவனேஸ்வரிக்கும் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. விஸ்வநாதன்- புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். புவனேஸ்வரி அம்மையாருக்கு ஒரே ஒரு மனக்குறை. இந்த உலகில் சாதாரணமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் குறை தான் அது. காசி விஸ்வநாதா! இரண்டு பெண்களைக் கொடுத்தாய். ஏன் ஒரு ஆண்குழந்தையைத் தர மறுக்கிறாய்? அவள் காசிநாதனை வேண்டிக்கொண்டே இருந்தாள். காசிக்கு போய், விஸ்வநாதர் சன்னதியில் நின்று நேரடியாக வேண்டிக்கொள்ள அவளுக்கு ஆசை தான். ஆனால், கணவர், குழந்தைகளை விட்டுச்சென்றால் கவனித்துக் கொள்ள சரியான ஆள் வேண்டும். மேலும், பெண் குழந்தைகள் போதாதா? என அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? எனினும், அக்காலத்தில் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், அங்கேயே குடியிருப்பவர்களைக் கொண்டு, சில நேர்ச்சைகளைச் செய்வது வழக்கம். புவனேஸ்வரியின் அத்தை வீடு காசியில் இருந்தது. அந்த அத்தைக்கு தகவல் சொல்லி, அவர் மூலமாக விஸ்வநாதருக்கு நேர்ச்சைகளைச் செய்தாள். ஒருநாள், புவனேஸ்வரியின் கனவில் அதிபிரகாசமான ஒளிவெள்ளம் தோன்றியது. பரமேஸ்வரன் தியானநிலையில் தோன்றினார். அதே நிலையில், ஒரு குழந்தையாக உருமாறினார். புவனேஸ்வரியின் உடலில் அந்த ஒளி பாய்வது போல் இருந்தது. அவள் திடுக்கிட்டு விழித்தாள். இந்த கனவு கண்டபிறகு சில நாட்களிலேயே கர்ப்பவதியாகி விட்டாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் இருந்தாள். நிச்சயமாக, அந்த பரமசிவனே தன் வயிற்றில் பிறப்பான் என நம்பினாள். விஸ்வநாதா! பரமேஸ்வரனே! இம்முறை உன்னிடம் நான் விண்ணப்பித்திருப்பது ஆண் குழந்தைக்காக! அதை மறந்து விடாதே, என தினமும் தியானம் செய்தாள்.அவளது கோரிக்கை நிறைவேறியது.

சூரியபகவான் மகரராசியில் என்று நுழைகிறாரோ, அன்று அவரது பிரகாசம் அதி பயங்கரமாக இருக்கும். அந்த நாளை வடநாட்டவர் மகர சங்கராந்தி என்றும், தென்நாட்டவர் பொங்கல் என்றும் கொண்டாடுவர். மகர ராசியில் பிறந்தவர்கள் எந்த விலை கொடுத்தேனும், என்ன செய்தேனும் நினைத்ததை சாதித்துக் காட்டுவார்கள் என்றும் சொல்வதுண்டு. இப்படி மகரத்திற்கு முக்கியத்துவம் தரும் அந்த இனியநாளில், புவனேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. சிவசிவா! உன் அடியாளான என் பிரார்த்தனையை ஏற்று, தயவு செய்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு, என்று பிரார்த்தித்தபடியே வலியையும் தாங்கிக் கொண்டாள் அந்தத்தாய்.அன்று 1863, ஜனவரி12 திங்கள்கிழமை. சிவனுக்குரிய கிழமை திங்கள். புவனேஸ்வரியின் பிரார்த்தனை பலித்தது. கூனிக்கிடந்த உலகத்தின் முதுகெலும்பை நிமிர வைக்க அவதரித்தார் அந்த மகான். ஆம்...விவேகானந்தர் பிறந்து விட்டார்.குழந்தையைப் பார்க்க உறவினர்கள் புவனேஸ்வரியின் வீட்டில் குவிந்து விட்டார்கள்.இவன் அவனுடைய தாத்தா துர்காசரணரைப் போலவே இருக்கிறான், என்று தான் பெரும்பாலோனோர் சொன்னார்கள். இல்லறத்திற்கு பிறகும் துறவறம் பூண்ட அந்த தாத்தாவையும் தாண்டி, இல்லறத்துக்குள்ளேயே நுழையாமல், உலகின் ஆன்மிகப்புரட்சியை ஏற்படுத்தப் போகும் வீரத்துறவியல்லவா அவர்! குழந்தைக்கு பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன.குடும்பத்தார் அவனுக்கு தங்கள் குலப்பெயரான தத்தாவையும் சேர்த்து, நரேந்திரநாத் தத்தா என பெயர் வைக்க வேண்டும் என்றனர். புவனேஸ்வரிக்கு அந்தப்பெயரில் விருப்பமில்லை.இவன் காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்தவன். அதனால் விஸ்வநாதன் என்ற பெயர் தான் பொருத்தம். ஆனாலும், என் கணவரின் பெயரும் அதுவாகவே இருப்பதால், அதே பெயரில் அவனை அழைப்பது மரியாதையாக இருக்காது. அதனால், அவனுக்கு நான் வேறு பெயர் வைக்கப் போகிறேன், என்று சொல்லி, அதே பெயரால் குழந்தையை அழைக்கவும் ஆரம்பித்து விட்டாள். ஆனால், குடும்பத்தார் அதை ஏற்கவில்லை.

jeudi 30 janvier 2014

நீர் கண்டு களித்த காட்சி -1

 பிளட் மூன் 

முழு சந்திரகிரகணமான இன்று கருஞ்சிகப்பு வண்ணத்தில் தோற்றம் கண்ட சந்திரனை ஆசியா, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கண்டு களித்தனர்.

ஒரு சிலருக்கு முழு கிரகண சமயத்தில் சந்திரன் ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறத்தில் அதாவது ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ப தோற்றமளித்த அரிய காட்சியைப் பார்க்க முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆப்சர்வேட்டரியில் இந்த பிளட் மூன் தோற்றம் கண்டவுடன் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

சிட்னி ஆப்சர்வேட்டரி வானியலாளர் ஜெஃப் வியாட் கூறும்போது, “அற்புதமான காட்சி, மேகம் குறுக்காக வந்தது, ஆனால் முழு கிரகணத்தைப் பார்த்தோம். சிகப்பு-பிரவுன் நிறத்தில் சந்திரன் தோற்றமளித்து அருமையான காட்சி அனுபவம்” என்றார்.

ஜப்பானின் சில பகுதிகள் உயரமான கட்டிடங்களிலிருந்து சிலர் பிரவுன் நிறமாக மாறிய சந்திரனைக் கண்டு களித்தனர்.

பொதுவாக முழு கிரகணம் எனில் சந்திரன் ஒரு மாதிரியான அரைகுறை கரு நிறத் தோற்றமளிக்கும். ஆனால் இந்த சந்திர கிரகணத்தின் போது ஆரஞ்சு-சிகப்பு வர்ணத்தில் சந்திரன் காட்சியளிக்கும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

mercredi 29 janvier 2014

தேயிலை

ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.
இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.

தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது.இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

தேயிலை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.

தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது. சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது.

தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன

mardi 28 janvier 2014

மின்குமிழ்,-2


கடந்த 1912ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் லோவஸ்டப்ட் பகுதியில் வசித்து வருபவர் ரோஜர் டைபால்(74). இவரது வீட்டில் ஒஸ்ரம் என்ற நிறுவனம் தயாரித்த 230 வோல்ட் மற்றும் 55 வாட் டிசி வகையை சேர்ந்த பல்பு ஒன்று பல ஆண்டுகளாக ஒளி கொடுத்து வருகிறது.
இது குறித்து ஆச்சரியமடைந்த ரோஜர் டைபால், தனது வீட்டில் ஒளி கொடுத்து வரும் மின்குமிழ் தயாரிப்பு எண் போன்ற தகவல்களை சேகரித்து, ஒஸ்ரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் இந்த மின்குமிழ் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டிருந்தார்.
இது குறித்து ஆராய்ந்த ஒஸ்ரம் நிறுவனம், ரோஜர் டைபால் அனுப்பி வைத்த மின்குமிழ் கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதன்மூலம் கடந்த 100 ஆண்டுகளாக ரோஜர் டைபாலின் வீட்டில் அந்த மின்குமிழ் ஒளி கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து ரோஜர் டைபால் கூறியதாவது,
இங்கிலாந்தில் உள்ள லோவஸ்டப்ட் பகுதியில் உள்ள எங்களின் வீட்டில் பல ஆண்டுகளாக இந்த மின்குமிழ் ஒளி கொடுத்து வந்தது. இதன்பிறகு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தோம். அங்கேயும் இந்த மின்குமிழ் தொடர்ந்து ஒளி கொடுத்தது.
இதனையடுத்து அந்த மின்குமிழ் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளித்த ஒஸ்ரம் நிறுவனம், கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. மேலும் இதற்காக லண்டனை சேர்ந்த ஒஸ்ரம் ஜிஇசி நிறுவனம் எனக்கு சான்றிதழ் அளித்துள்ளது என்றார்.

முன்னதாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக ஒளி கொடுக்கும் மின்குமிழ், கடந்த 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மின்குமிழ், கடந்த 1895ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் மின்குமிழ் கண்டுபிடித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

lundi 27 janvier 2014

மின்குமிழ் -1

எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர் .

மின்குமிழ் செயலாற்றுகைத் தரப்படுத்தல் என்பது CFL மின்குமிழ்களின் சக்திச் செயலாற்றுகையை மதிப்பிடுவதற்கான ஒரு சுட்டியாகும். மின்குமிழின் பயன்பாடு, சக்திக் காரணி மற்றும் நிற வெப்பநிலை ஒருங்கிசைவு ஆகியன இந்தச் செயலாற்றுகைத் தரப் படுத்தலில் அடங்குகின்றன. அதே நேரம் மின்குமிழ் பயன்பாடு 90% செயலாற்றுகைத் தரப் படுத்தலுக்குப் பங்களிப்புச் செய்கின்றது.

செயலாற்றுகைத் தரப்படுத்தலுக்கான மதிப்பீட்டு அடிப்படையில் நட்சத்திரக் கணிப்பீட்டு அடையாளங்கள் குறித்தொதுக்கப் படுகின்றன. அதிகளவான நட்சத்திர அடையாளங்களை உடைய CFL மின்குமிழ்கள் அதிக சக்தி வினைத் திறன் வாய்ந்தனவாகும்.

நட்சத்திரக் கணிப்பீட்டு அடையாளங்கள் தவிர சக்தி முத்திரையிடல் நடபடிக்கையில் கீழ்காணும் விடயங்களும் கிடைக்கக் கூடியனவாக உள்ளன.

  • உற்பத்தியாளர் பெறுமானம் குறித்த உபகரணத்தின் கணிக்கப்பட்ட சக்தி (வொட்களில்)
  • ஒரு ஆய்வு கூடப் பரிசோதனை மேற் கொள்ளப் பட்டதன் பின்னர் உபகரணத்தின் உண்மையான சக்தி நுகர்வு (வொட்களில்)
  • உண்மையான சக்தி நுகர்வின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கான சக்தி நுகர்வு நாள் ஒன்றுக்கான 4 மணித்தியால இயக்கத்தைக் கருத்திற் கொண்டு)
  • மாதிரி இலக்கம்
  • வர்த்தகக் குறியீடு

dimanche 26 janvier 2014

புவி வெப்பமயமாதல் -2

புவியினுடையவளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்தல் புவி வெப்பமடைதல் எனப்படும். அதாவது இயற்கையான காரணிகளினாலும் மனித நடவடிக்கைகளினாலும் வளிமண்டலத்தின்வெப்பம் அதிகரிப்பதனால் புவியின் வெப்பநிலை அதிகரித்தல் புவிவெப்பமடைதல் எனப்படுகின்றது.


  பச்சைவீட்டு விளைவில் செல்வாக்குச் செலுத்தும் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்தல்இந்தப் புவிவெப்பமடைவதற்கு பிரதான காரணமாகும். பச்சைவீட்டு வாயுக்களான CO2, CH4, N2O, NOx போன்றவற்றின்செறிவு வளிமண்டலத்தில் அதிகரிக்கப்படுவதனால் வெப்பசக்தியை புவிக்கு உறிஞ்சி வைத்துக் கொள்ளும்திறனும் அதிகரிக்கின்றது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கின்றது. கடந்த 2000 – 2012 ஆம் ஆண்டு வரையிலான12 வருட காலப்பகுதியினுள் 0.8 OC வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4 OC வெப்பநிலைஅதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

   வளிமண்டலத்தில்அதிகளவில் பச்சைவீட்டு வாயுக்களான காபனீரொட்சைட், மெதேன், நைதரசன் ஒட்சைட்டுஆகிய வாயுக்களின் செறிவு அதிகரிக்கின்றபோது அவைவெப்பநிலையை அதிகரிப்பதில் செல்வாகுக்குச் செலுத்தும். அண்மைக்காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு ஆரம்பத்தில் இருந்தததைவிட அதிகரித்துவருவதனை அது பற்றிய அவதானிப்புகள்எடுத்துக் காட்டியுள்ளன.

  காபனீரொட்சைட்டின்செறிவு வருடமொன்றிற்கு ஏறக்குறை 0.2 சதவீதத்தினால் அதிகரித்து வருகின்றது. காபனீரொட்சைட்டில் ஏற்படுகின்ற 10 சதவீதமான அதிகரிப்பு உலகின் சராசரி மேற்பரப்புவெப்பநிலையின் 0.03 சதவீதமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டில் வலளிமண்டலத்தில் உள்ளகாபனீரொட்சைட்டின் செறிவு ஏறக்குறைய 284 ppm(parts per million) ஆக இருந்தது. 1974 இல்இது ஏறக்குறைய 330 ppm ஆகக் காணப்பட்டது. 2000 ஆம்ஆண்டில் இது 379 ppm ஆக அதிகரித்துள்ளது. 2010 ஆண்டில் ஜீலைமாத அவதானிப்புகளின்படி 390.9 ppm ஆக அதிகரித்துள்ளது. 2012 ஜீலை மாதத்தில்  395.77 ppm ஆகவும் உள்ளது.

samedi 25 janvier 2014

பழங்கள்

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.

பழங்களை இரு வகையாகப் பாகுபடுத்தலாம் அவையாவன சதைப்பிடிப்பான பழங்கள், உலர்ந்த பழங்கள் என்பனவாகும்.

பழங்கள் உடலுக்கு ரொம்ப நல்லது என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பழத்தில் என்னென்ன சத்துகள் இருக்கிறது கேட்டால் கூட சொல்லி விடுவார்கள். ஆனால் எந்த பழத்தில் என்ன சத்திருக்கின்றது என்று கேட்டால் உங்களால் கூறமுடியுமா?? நமது உடலுக்கு கல்சியம், இரும்புசத்து , பொஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.

புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.

கல்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கல்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .

பொட்டாசியம் சத்துள்ள பழங்கள்
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.

பொஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்
மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பொஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுகின்றவர்களுக்கு, பொஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.

பொஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

vendredi 24 janvier 2014

நூல் நிலையம்

கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது நம் மூதாதையர்கள் கூறிய அருங்கருத்துகளில் ஒன்றாகும். அவர்களின் அருள்வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே. நாம் பலதரப்பட்ட நூல்களைக் கற்பதன் மூலம் சிறந்த அறிஞர்களாகலாம். ஆனால், இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும் அனைத்து வகையான நூல்களையும் ஒருவரே வாங்கக் கூடியதென்பது சாத்தியமாகக்கூடிய காரியமா? ஆகவே, இவ்வாறான சிக்கல்களைக் களைவதற்குச் சிறந்த வழி நூலகம் அமைக்கப்படுவதே ஆகும். இந்த நூலகங்களுக்குச் சென்று பலதரப்பட்ட எழுத்துப் படிவங்களை வாசிப்பதால் நிறைய பலன்கள் நம்மை வந்து சாறும் என்பது வெள்ளிடைமலையாகும்.

 நூலகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தகுந்த பல தரப்பட்ட புத்தகங்கள் ஆங்காங்கே சீராகப் பேழையில் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச், சிறுவர்களுக்கான வண்ணப்படங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள், தொடக்க, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்கள், அரசாங்கத் தேர்வுக்கான மீள்பார்வை மற்றும் பயிற்சிப் புத்தகங்களும் முறையே வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பொது அறிவை வளர்ப்பதற்காக நாளிதழ்கள், வார மாத இதழ்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சிய நூல்களும் நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீராக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நூலகத்திற்கு வருவோரைக் கவரும் வண்ணத்தில் இருக்கும். இன்றைய பெரும்பாலான நூலகங்களில் கணினி, நகல் எடுக்கும் கருவி, பாட நூல் சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள் போன்ற வசதிகளும் இருக்கின்றன. மேலும் அமைதியான சூழலில் புழுக்கமில்லாமல் ஆழ்ந்து படிப்பதற்கு இன்றைய நூலகங்கள் குளிர்சாதன வசதிகளைக் கொண்டு விளங்குகின்றன.

 நூலகங்களுக்குச் செல்வதன் மூலம் நாம் பலவகையான நன்மைகளை அடைகிறோம். அரசாங்கத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அவசியம் நூலகத்தை உற்ற தோழனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தங்களின் மனத்தை ஒருநிலைப்படுத்த அமைதியான சூழலில் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதன் மூலம் கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்வர். இதற்கு முக்கியக் காரணம் நூலகத்தில் கிடைக்கக்கூடிய அமைதியான சூழலே ஆகும். இதுபோன்ற அமைதியான சூழலை நாம் வேறெங்கும் பெற இயலாது. இது தேர்வினை எதிர்நோக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை அலைபாய விடாமல் இருக்க வழிவகுக்கிறது.

 காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள் தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடிகிறது. இதன்வழி நாம் நம் நாட்டில் பெருகிவரும் வன்முறை, குண்டர் கும்பல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூகச்சீர்கேடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இது நம் எதிர்காலத் தலைமுறையினர் கற்றவர்களாகவும் ஒழுக்கத்தில் ஓங்கியவர்களாகவும் திகழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.

 அதுமட்டுமல்லாமல் நூலகங்களில் உள்ள வார, மாத இதழ்கள் சஞ்சிகைகள் மற்றும் கலைக்களஞ்சிய நூல்களைத் தினமும் கற்பதன் மூலம் நாம் உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால், நாம் கிணற்றுத் தவளை போல் இல்லாமல் வெளியுலகம் அறிந்தவர்களாகத் திகழ்வோம். ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதுபோல நாம் வாசிப்பதன் மூலம் நமக்குத் தெரியாத பல விவரங்களைத் தெரிந்து கொள்வதோடு  நம்முடைய வாசிப்புப் பழக்கத்தையும் வலுவடையச் செய்து கொள்ளலாம்.

 எனவே, நாம் வயது வரம்பின்றி நூலகத்திற்குச் சென்று அங்குள்ள பல எழுத்துப் படிவங்களை வாசித்துப் பலனடைய வேண்டும். அரசாங்கம் பொது மக்களின் வசதிகளுக்காக நிறுவப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாகி அங்குள்ள சலுகைகளை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நமது அனைவரின் கடமையாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல நாம் கற்றவர்களாக இருந்தால் எங்குச் சென்றாலும் மதிப்புப்  பெற்றுச் சிறப்புடன் வாழலாம்.

jeudi 23 janvier 2014

கல்பனா சௌலா,

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்' என்பது சிலப்பதிகார வரி. கண்ணகியின் சின்னக் கால்கள் பூமியிலேயே பட்டதில்லை என்பதை ஒரு சிறப்பாகச் சொல்லும் வரி. ஆனால், பெண்ணின் சின்னப் பாதங்களுக்கு, விண்ணைத் தீண்டவும் சிறகுகள் முளைத்தன. அதற்கு உதாரணம், கல்பனா சாவ்லா!

ஹரியானா (Haryana) மாநிலத்தில் கர்னால் (Karnal) என்ற ஊரில் 1961ஆம் ஆண்டு, மார்ச் 17ஆம் தேதி பிறந்தார் கல்பனா சாவ்லா (Kalpana Chawla). சிறு வயதில் ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை பார்த்துக்கொண்டிருப்பார். தானும் ஒரு நாள் விமானம் ஓட்ட வேண்டும் என்று ஆசை கொண்டார். 


சண்டிகரில், உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் (Aeronautical Engineering) படிப்பில், 1982 ல் சேர்ந்தார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த அந்தத் துறையில் கல்பனா சாவ்லாதான் முதல் பெண்!


இளங்கலை பட்டம் பெற்றதும் மேற்படிப்புக்காக அமெரிக்கா பறந்தார். டெக்ஸாஸ் (Texas) பல்கலைக் கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். வான ஊர்திப் பயிற்சியாளர் ஆனார். 


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா/NASA) அவரை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. கடும் பயிற்சிகளுக்குப் பிறகு 1997ல் 'ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா' (Space Shuttle Columbia) என்னும் விண்வெளிக் கலத்தில் பறந்தார். 


விண்வெளியில் பதினைந்து நாட்கள் இருந்தார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார் கல்பனா சாவ்லா. 

இரண்டாவது முறை கல்பனாவுடன் ஆறு பேரையும் அனுப்பி வைத்தது நாசா. 2003ஆம் ஆண்டு ஜனவரி16ல் அந்த விண்கலம் பறந்தது. பிப்ரவரி முதல் தேதி பூமிக்குத் திரும்பியது. பதினைந்து நிமிடங்களில் பூமியைத் தொட்டுவிடும் என்கிற நிலையில், விண்கலம் வானத்திலேயே வெடித்தது. கல்பனா உள்ளிட்ட ஏழு பேரும் விண்கலத்துடன் வெடித்துச் சிதறினார்கள். 

mercredi 22 janvier 2014

பனிக்காலம்

பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை  காணப்படும். 

mardi 21 janvier 2014

கணனி

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் செயற்படுத்தும் எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பிட்ட இழிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் அகில தெரிங் எந்திரத்தை போன்மிக்ககூடிய எந்த கணினியும்) கொண்ட கணினி, கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்த கணினியினதும் கொள்பணியை ஆற்றக் கூடியது, அதாவது தனியாள் உதவியாளத்தில் இருந்து மீக்கணினி வரையுள்ள எந்த கணினியினதும். ஆகவே சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலக-யந்திரனை கட்டுப்படுத்தல் வரையான அனேக கொள்பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறன் காலப்போக்கில் அடுக்குறிபோக்கில் அதிகரித்து சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை மூர் விதி என்று குறிப்பிடுவர்.

பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீக்கணினிகள் மற்றும் நிறுவனங்களின் பரிமாற்ற செயற்பாடுகளுக்கு பயன்படும் பிரதான-சட்டங்கள் போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சையமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன்பாட்டுக்குரியதுமான தனியாள் கணினிகளும், அதன் கொண்டுசெல் நிகரான ஏட்டுக்கணினிகளும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக்கணினிகளாகும். உட்பொதிக்கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகள் ஆகும். இவை சண்டை விமானங்களில் இருந்து இலக்கமுறை படப்பிடிப்பு கருவிகள் வரை பயன்படுத்தப் படுகின்றன.

ஆதியில் "கணிப்பான்" என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறிமுறை கணிப்பு சாதனங்களின் உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அன்டிகைதிரா எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதொவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறிமுறை கணிப்பு சாதனங்கள் பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக துளைப்பட்டை, வெற்றிட கட்டுளம் என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை 1837 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பல விஞ்ஞான கணிப்பு தேவைகளுக்கு, கூடிய மடங்கடி கொண்ட விசேடபயன் ஒத்திசை கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிரசினைகளின் நேரடி பௌதிக அல்லது இலத்திரனியல் மாதிரியுருவை அவை கணிப்புக்களுக்கு பயன்படுத்தின. இத்தகைய கணினிகள் இலக்கமுறை கணினிகளின் அபிவிருத்திக்கு பின்னர் மிகமிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அலன்_டூரிங் ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.

இரண்டாம் உலக போரின் போது சேர்மானிய சங்கேத குறிப்புகளை கண்டறிய கொலோசஸ் கணினி பயன்பட்டது.
வரவர திறனும், நெகிழ்வுதன்மையும் கூடிய கணிப்பு சாதனங்கள் 1930, 1940 ஆம் ஆண்டுகளில் பின்னடையாக உருவாக்கப்படலாகின. இவை நவீன கணினிகளின் மேன்மையான பண்புக்கூறுகளை படிப்படியாக சேர்த்துக் கொண்டன, உதாரணமாக இலக்கமுறை இலத்திரனியல் உபயோகம் (கௌவுட் சனொன் என்பவரால் 1937 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது), கூடுதல் நெகிழ்வுதன்மை வாய்ந்த செய்நிரலாக்கம். ஒரு குறிப்பிட்ட புள்ளியை இந்தக் காலக்கோட்டில் முதலாவது கணினி என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. குறிப்பிடதக்க சாதனைகளாக கொன்ராட் ஃசுஸ் என்பாரின் ஃசட் எந்திரம், ஆங்கிலேயரின் இரகசிய கொலோசஸ் கணினி, அமெரிக்க என்னியாக் என்பவை அமைந்தன.
என்னியாக்கின் குறைகளை தெரிந்து கொண்ட அதன் அபிவிருத்தியாளர்கள், அதைவிட நெகிழ்வுதன்மை கூடியதும், இலட்சணமானதுமான வடிவமைப்பை உருவாக்கினார்கள். பின்னாளில் செய்நிரல் தேக்க கட்டமைப்பு என அறியப்படும் இதிலிருந்தே அனைத்து நவீன கணினிகளும் பெறப்படுகின்றன. இந்த கட்டமைப்பிலிருந்தே கணினிகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் பல 1940 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன, இதில் முதலில் செயற்பட தொடங்கியது மான்செஸ்டர்-சிறிய-அளவிடை-பரீட்சார்த்த எந்திரம் ஆகும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய முதலாவது கணினி எட்சாக் ஆகும்.
கட்டுளத்தால் இயக்கப்பட்ட கணினிகளே 1950 ஆம் ஆண்டுகள் முழுவதிலும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு திரிதடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக 1960 ஆம் ஆண்டுகளில், கட்டுள கணினிகள் செலவு குறைந்த, சிறிய, வேகமான திரிதடையக் கணினிகளால் மாற்றீடு செய்யப்படலாயின. ஒருங்கிணைந்த-சுற்றமைப்பு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் 1970 ஆம் ஆண்டுகளில் கணினி உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைந்து சென்றது, இதனால் தற்போதைய தனியாள் கணினிகளின் முன்தோன்றல்களை வாங்கும் திறன் சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டது.

பொதுத் தேவைகளுக்கான ஒரு கணினி நான்கு முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவை,
  1. கணித ஏரண அகம் (arithmetic and logic unit)
  2. கட்டுப்பாட்டகம் (Control unit)
  3. நினைவகம் (memory)
  4. உள்ளிடு சாதனங்களும், வெளியீட்டுச் சாதனங்களும்
இப் பகுதிகள், கம்பித் தொகுதிகளினால் உருவாக்கப்படும் பாட்டைகளினால் (busses) ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டகம், கணித ஏரண அகம், பதிவகம் (registers), அடிப்படையான உள்ளிடு - வெளியீட்டுச் சாதனங்கள், இவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்படும் பிற வன்பொருட்கள் என்பன ஒருங்கே மையச் செயலகம் (central processing unit) எனப்படுகின்றன. தொடக்ககால மையச் செயலகங்கள் தனித்தனியான கூறுகளைக் கொண்டிருந்தன. ஆனால் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒருங்கிணை சுற்றமைப்பாக (integrated circuit) உருவாக்கப்படுகின்றது. இது நுண்செயலகம் (microprocessor) எனப்படுகின்றது.

கட்டுப்பாட்டகம்

கட்டுப்பாட்டுத் தொகுதி அல்லது மையக் கட்டுப்படுத்தி என்றும் சில சமயங்களில் அழைக்கப் படுகின்ற கட்டுப்பாட்டகம், கணினியில் பல்வேறு கூறுகளை இயக்குகிறது. இது ஆணைகளை ஒவ்வொன்றாக வாசித்து அவற்றைக் குறிநீக்குகிறது (decode). கட்டுப்பாட்டுத் தொகுதி குறிநீக்கிய ஆணைகளைத் தொடராக கட்டுப்பாட்டுக் குறிப்புகளாக்கி அவற்றின் மூலம் கணினியின் பிற பாகங்களை இயக்குகிறது. உயர்தரக் கணினிகளில், கட்டுப்பாட்டகம், செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஆணைகளின் ஒழுங்கை மாற்றவும் கூடும்.
எல்லா மையச் செயலகங்களிலும் பொதுவாக இருக்கும் ஒரு கூறு ஆணைச்சுட்டியாகும். சிறப்பு நினைவகமான இக் கூறு, அடுத்த ஆணையை நினைவகத்தின் எவ்விடத்திலிருந்து வாசிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறது.
கட்டுப்பாட்டகத்தின் செயல்பாட்டு ஒழுங்குகளும், அவற்றின் வகைகளைப் பொறுத்து மாறுபாடாக அமையக் கூடும். சில படிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யாமல் ஒரே நேரத்தில் செய்யும் நிலைகளும் உண்டு. கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகள் எளிமைப் படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
  1. ஆணைச்சுட்டியினால் சுட்டப்படும், அடுத்த ஆணைக்குரிய குறிமுறையை வாசித்தல்.
  2. கணினியின் பிற தொகுதிகளுக்கு ஆணை வழங்குவதற்காக எண்முறைக் குறியீடுகளை குறிப்புகளாக மாற்றும் பொருட்டு அவற்றைக் குறிநீக்குதல்.
  3. ஆணைச்சுட்டி அடுத்த ஆணையைச் சுட்டும் வகையில் அதனை ஏறுமானம் (Increment) செய்தல்.
  4. ஆணைகளைச் செயல்படுத்தத் தேவையான தரவுகளை நினைவகத்திலிருந்து அல்லது உள்ளிடு சாதனத்தில் இருந்து வாசித்தல். தேவைப்படும் தரவுகள் இருக்கும் இடம் பெரும்பாலும் ஆணைக் குறிமுறைகளுள் தரப்பட்டிருக்கும்.
  5. தேவையான தரவுகளை கணித ஏரண அகத்துக்கு அல்லது பதிவகத்துக்கு வழங்குதல்.
  6. ஆணைகளை நிறைவேற்றுவதற்கு, கணித ஏரண அகத்தின் அல்லது வேறு சிறப்பு வன்பொருட்களின் தேவை இருப்பின், அவ்வேலையைச் செய்வதற்குக் குறித்த வன்பொருளுக்கு ஆணையிடுதல்.
  7. கணித ஏரண அகத்திலிருந்து கிடைக்கும் முடிவுகளை நினைவகத்தின் ஒரு இடத்திலோ, பதிவகத்திலோ, வெளியீட்டுச் சாதனம் மூலமாகவோ எழுதுதல்.
  8. மீண்டும் முதலாவது படிமுறைக்குச் செல்லுதல்.
கருத்துரு அடிப்படையில், ஆணைச்சுட்டி என்பது இன்னொரு நினைவகமே என்பதால், இது கணித ஏரண அகத்தில் செய்யப்படும் கணிப்பீடுகளினால் மாற்றப்படலாம். ஆணைச் சுட்டிக்கு 100 ஐக் கூட்டுவதன் மூலம் அது அடுத்த ஆணையை நிரலில் 100 இடங்கள் கீழே தள்ளியுள்ள இடத்திலிருந்து வாசிக்கும்படி செய்யலாம். ஆணைச்சுட்டியை மாற்றும் ஆணைகள் தாவல்கள் எனப்படுகின்றன. இவை, கணினிகளால் திரும்பத் திரும்ப நிறைவேற்றப்படக் கூடிய ஆணைகளான கண்ணிகள், நிபந்தனை ஆணைகள் என்பவற்றுக்கும் இடமளிக்கின்றன.
ஒரு ஆணையைச் செயல்படுத்துவதற்காகக் கட்டுப்பாட்டகம் நடைமுறைப்படுத்தும் இயக்கங்களுக்கான படிமுறைகள் ஒரு சிறிய கணினி நிரல்களைப் போன்றவை என்பது கவனிக்கத் தக்கது. உண்மையில் சில சிக்கலான மையச் செயலக வடிவமைப்புக்களில், இத்தகைய வேலைகளைச் செய்யும் நுண்குறிமுறைகளை இயக்குவதற்காக நுண்வரிசைமுறையாக்கி (microsequencer) என்னும் சிறிய கணினி பயன்படுத்தப்படுவது உண்டு.

கணித ஏரண அகம்

கணித ஏரண அகம், எண்கணித முறையானதும், ஏரண முறையானதுமான இருவகை இயக்கங்களைச் செயல்படுத்தக் கூடியது. இது கூட்டல், கழித்தல் ஆகிய எண்கணிதச் செயற்பாடுகளை மட்டும் செய்யக்கூடியனவாகவோ அல்லது பெருக்கல், வகுத்தல், முக்கோணகணிதச் செயற்பாடுகள் (சைன், கோசைன் முதலியவை), வர்க்கமூலம் போன்ற செயற்பாடுகளையும் செய்ய வல்லவையாகவோ இருக்கலாம். சில வகையானவை முழு எண்களில் மட்டுமே செயற்பாடுகளைச் செய்யக் கூடியன. வேறு சில மெய்யெண்களுக்காகப் பயன்படும் மிதவைப் புள்ளிகளைப் பயன்படுத்துகின்றன. எனினும், மிக எளிமையான செயல்பாடுகளை மட்டும் செய்யக்கூடிய கணினிகளையும், சிக்கலான செயல்பாடுகளையும் எளிமைப்படுத்திச் செய்யக்கூடிய வகையில் நிரலாக்கம் செய்யமுடியும். ஆனால், இவ்வகையில் செயல்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கும். கணித ஏரண அகங்கள், ஒன்று இன்னொன்றுக்குச் சமமா, ஒன்றை விட இன்னொன்று பெரியதா சிறியதா போன்ற அடிப்படைகளில் எண்களை ஒப்பிட்டு பூலியன் உண்மை மதிப்பை ("உண்மை" அல்லது "பொய்") தரக்கூடும்.
ஏரணச் செயற்பாடுகள், AND, OR, XOR, NOT போன்ற பூலியன் ஏரணத்தை உள்ளடக்கியவை.

நினைவகம்

கணினியின் நினைவகம் ஒன்றை எண்களை வைக்கக் கூடிய அல்லது அவற்றிலிருந்து எடுத்து வாசிக்கக் கூடிய சிற்றறைகளின் பட்டியலாகக் கொள்ள முடியும். ஒவ்வொரு சிற்றறைக்கும் ஒரு எண்ணிடப்பட்ட முகவரி உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு எண்ணைச் சேமிக்க முடியும். "எண் 123 ஐ 1357 எண்ணிட்ட சிற்றைக்குள் வை" என கணினிக்கு ஆணையிட முடியும். அல்லது, "சிற்றறை 1357 இலுள்ள எண்ணை, சிற்றறை 2468 இலுள்ள எண்ணுடன் கூட்டி 1595 எண்ணிட்ட சிற்றறைக்குள் வை" என ஆணையிட முடியும். நினைவகத்துள் சேமிக்கப்படும் தகவல் எதுவாகவும் இருக்கலாம். எழுத்துக்கள், எண்கள், கணினிக்குரிய ஆணைகள் போன்ற எவற்றையும் ஒரேயளவு இலகுவாக நினைவகத்துள் இடமுடியும். மையச் செயலகம் தகவல்களை பல்வேறு வகைகளாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. நினைவகங்களைப் பொறுத்து வெறும் எண்களாக இருக்கும் தகவல்களை அவற்றுக்குரிய இயல்புகளுடன் வெளிப்படுத்த வேண்டியது மென்பொருட்களின் வேலையாகும்.
ஏறத்தாழ எல்லாத் தற்காலக் கணினிகளிலும், ஒவ்வொரு நினைவுச் சிற்றறையும் 8 பிட்டுக்கள் கொண்ட குழுக்களாக அமையும் இரும எண்களைச் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பிட்டுகள் கொண்ட தொகுதி ஒரு பைட்டு எனப்படும்.

கணினிகள் செயல்படும் முறை

கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. (0 மற்றும் 1) மையச்செயலகம்(CPU) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது. மையச்செயலகத்தில் ஒரு நுண்செயலி(microprocessor), ஒரு நினைவகம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு (control unit) ஆகியன ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். அந்த நினைவகத்தில் ஒரு நுண்செயலி என்ன செய்ய வேண்டும் மற்றும் என்னச்செய்யக்கூடாது என்று இயந்திர மொழியில் கட்டளைகள் இடப்பட்டு அது சேமிக்கப்பட்டிருக்கும்.

நுண்செயலியின் கட்டளைத் தரவு அளவு

கட்டளைகளானது ஒரு நுண்செயலியின் செயல் அளவைப் பொருத்து மாறக்கூடியது. நுண்செயலிகள் பொதுவாக 8 பிட்(8 துண்டுகள்) அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளை கையாளும் தண்மையுடையது. ஒருசில நவீன நுண்செயலிகள் 16 பிட், மற்றும் 32பிட் அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் தண்மை கொண்டது. 64 பிட் தரவு கட்டளைகள் கொண்டு செயல்படும் நுண்செயலிகள் அதிவேகமாக கணக்குகளையும் மற்ற வேளைகளையும் செய்து முடிக்கும்.

கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்கள்

முதலில் தரவு பிறகு கட்டளைகள் அதன்பிறகு செயலாக்கம் என்ற அடிப்படையில் தான் கட்டளைத் தொகுதிகள்(INSTRUCTION SETS) உருவாக்கப்படுகின்றன. இந்த கட்டளைத் தொகுதிகள் ஒரு கணினியை வழிநடத்துகின்றன. முதலில் கணனியின் நினைவகத்தில் ஒரு கோப்பு உருவாக்கி, அந்த கோப்பில் ஒரு செயலுக்கான கட்டளைத் தொகுதிகளை தயார்செய்து பிறகு அதை சேமித்து அதனை தேவைப்படும்போது பயன்படுத்தலாம். கட்டளைகளை நடைமுறையில் நிரல்கள் (programs) என்றழைக்கப்படுகின்றன. இந்த நவீன உலகில் கணினியின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் அதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்க இந்த நிரல்கள் என்று சொல்லக்கூடிய கட்டளைத்தொகுதிகளை பயன்படுத்தி, பல பயன்பாடுகளை செய்யக்கூடிய கட்டளைகளை உருவாக்கி, பிறகு அதனை நிலைவட்டில் சேமித்து இயக்கப்படுகின்றது. இதனையே நாம் இயக்கமுறைமை (operating system) என்று கூறுகிறோம். இந்த இயக்கமுறைமையானது கணினி புரிந்துகொள்ளும் விதத்தில் பயனர் இடக்கூடிய கட்டளைகளை இயந்திர மொழியாக மாற்றி கொடுக்கின்றது. இவ்வாறு கணினியானது மிக நுட்பமாக தனது பணியை செய்கின்றது.

கணினி வகைகள்

கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் தயாரிக்கபப்டுகின்றன.
  1. மீத்திறன் கணினி
  2. பெருங்கணினி
  3. நடுத்தர கணினிகள்
  4. மிகச்சிறிய/தனிநபர் கணினி

மீக்கணினிகள்

இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நுண்செயலிகளைக் (microprocessors) கொண்ட, மிகமிகச் சிக்கலான கணக்குகளைச் செய்யும் மிகப் பெரிய கணினிகள் ஆகும்.
கணினி
தொடரிசை
எணினி
இருபிறப்பி
மீக்கணினிகள்
பெருங்கணினி
நடுத்தர கணினிகள்
தனிநபர் கணினி

நடுத்தர கணினிகள்

இந்தக் கணினிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை மட்டும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை.

மிகச்சிறிய/தனிநபர் கணினி

ஒரே சமயத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவை பல்வேறு பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

வகைகள்


  • மேசைக் கணினி
  • மடிக்கணினி
  • கையடக்கக் கணினி
  • கைக்கணினி

lundi 20 janvier 2014

புலம்பெயர் தமிழர்கள்

புலம்பெயர் தமிழர் எனப்படுவோர் இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமா கக் கொண்டிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க புலம்பெயர் தமிழர் சனத்தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர் .ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர் பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர். ஏனையோர் சம காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்தோர் அடையாளம் புராதன மரபுரிமையில், தமிழ் மொழியில், தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி, தற்போதும் உயிர்த்துடிப்பான கலாச்சாரத்தில் காணப்படுகின்றது.

”19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சி நடந்தது. அதனால் தோட்டத் தொழிலாளிகளின் தேவை ஏற்பட்டது. தோட்ட முதலாளிகள் இந்தியாவிலோ, சீனாவிலோ குறைந்த செலவில் தொழிலாளிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவு, மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, மர்த்தினி, தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பலாம் என்ற சட்டத்தை உருவாக்கினார்கள். ஆங்கில, பிரெஞ்சு பகுதிகளுக்கும் தோட்டத் தொழிலாளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்தும் அப்படிதான் புலம்பெயர்ந்தார்கள்.

15 ஆண்டுகாலமாக பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து வருகிறேன். பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர்களின் மொழி, பண்பாடு பற்றி அறிய, தமிழர் வாழும் மற்ற நாடுகளில் எப்படி இருந்தது என்றும் அறிய வேண்டும்.

இந்தியாவிலிருந்து 2 வித சூழ்நிலையுள்ள நாடுகளுக்குப் பிரிகிறார்கள். தூரம் இதில் முக்கிய விஷயம். இந்தியா – சிங்கப்பூர், இந்தியா – மர்த்தினி… இந்த தூர வித்தியாசத்தைக் கவனியுங்கள். தூரம் குறைவு என்பதால் சிங்கப்பூர், இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டோடு தொடர்புகொள்ள வாய்ப்பு அதிகம். இதனால் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் பண்பாடு ஏறத்தாழ சமமாயிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு ஆகியவை குறைகிறது.

ரீயூனியன் தீவு மொரிஷியஸ் அருகில் உள்ளதால், அதன் தாக்கம் உண்டு. இந்திய, தமிழ் பண்பாடு வளர்ச்சி, தமிழர் வாழும் மற்ற பிரெஞ்சு பகுதிகளில் இந்த அளவு இருக்காது. அரசியல் ரீதியில் ரெயினியன், மத்தினி போன்றவற்றில் ஒரே நிலைதான்.

சென்றடைந்த நாடுகளின் மொழிக்கொள்கை அடுத்த காரணம். மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பன்மொழிக் கொள்கை உண்டு. பிரெஞ்சு பகுதியில் பன்மொழிக் கொள்கை இல்லை. புலம் பெயர்ந்த மக்கள்தொகையைப் பொறுத்தும் இது மாறுபடும். மலேசியாவில் தமிழர் அளவு 10%, தென் ஆப்பிரிக்காவில் 2% (விழுக்காடு குறைவு என்றாலும்கூட, அங்கு 3 லட்சம் தமிழர்கள்), சிங்கப்பூரில் 7%, மொரிஷியசில் 8%, பிஜித்தீவுகளில் 5%, மர்த்தினியில் 5-6 % (அதாவது 13000 தமிழர்கள்), ரீயூனியனில் 33% தமிழர்கள்.
மக்கள் தொகையில் தமிழர் அளவு சிங்கப்பூரை விட அதிகமாக இருந்தாலும், ரீயூனியன் பிரான்சை சார்ந்தது. கடந்த 5, 6 ஆண்டுகளாக இந்தப் பகுதி இந்திய அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறது.
இலங்கையின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று. சிங்கப்பூரின் 4 ஆட்சிமொழிகளில் தமிழும் உண்டு. மலேசியாவில் ஆட்சிமொழியாக இல்லாவிட்டாலும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பராம்பரியமாகக் கற்றுத் தரப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். மொரிஷியசிலுள்ள 5 இந்திய மொழிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டு.தென் ஆப்பிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோர் தமிழ் மொழியை தக்க வைக்க காரணிகளை உருவாக்கியுள்ளனர். பயன்பாடு இல்லாத மொழியை தக்க வைக்க முடியாது. சிங்கப்பூரில் பயன்பாடு, அரசியல் அங்கீகாரம் இருந்தாலும்கூட, தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமே படிக்கிறார்கள். அங்கே வீட்டுமொழியாகத்தான் தமிழ் இடம்பிடித்திருக்கிறது.

dimanche 19 janvier 2014

ஒலிம்பிக் விளையாட்டு



இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.

ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது.

பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை.
ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.
அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.


ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிரையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான்.

ஒலிம்பிக்சு நடந்த இடங்கள்

வருடம் இடம் ஆண்டு இடம்
1896 ஏதென்ஸ், கிரேக்கம் 1900 பாரிஸ், பிரான்சு
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா 1908 இலண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், சுவீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரிஸ், பிரான்சு 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா 1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, எசுப்பானியா
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா 2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரேக்கம் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கவுள்ளது. 2020ம் ஆண்டில் ஜபான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது.

பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

வருடம் இடம் ஆண்டு இடம்
1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 1928 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா 1936 கார்மிஷ்ச், ஜெர்மனி
1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 1952 ஆஸ்லோ, நார்வே
1956 கார்டினா, இத்தாலி 1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா
1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1968 க்ரெநோபில், பிரான்ஸ்
1972 சாப்போரோ, ஜப்பான் 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988 கால்கேரி, கனடா 1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994 லில்லேஹாம்மர், நார்வே 1998 நாகானோ, ஜப்பான்
2002 சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா 2006 தோரீனோ, இத்தாலி
2010 வான்கூவர், கனடா
2014 சோச்சி, ருசியா
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும்.

அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் ருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது.

samedi 18 janvier 2014

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??
கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்அருணகிரிநாதர் நூல்கள்
  • கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
  • கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
  • கந்தரனுபூதி (52 பாடல்கள்)
  • திருப்புகழ் (1307 பாடல்கள்)
  • திருவகுப்பு
  • சேவல் விருத்தம்
  • மயில் விருத்தம்
  • வேல் விருத்தம்
  • திருவெழுகூற்றிருக்கை

vendredi 17 janvier 2014

சோமசுந்தரப்புலவர்

சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 - சூலை 10, 1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா  புகழ் பெற்றவை யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலி என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரப் புலவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளையின் புதல்வி சின்னம்மையை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத் திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார். பதிகம்,ஊஞ்சல்என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம் நான்மணி மாலை அட்டகம் அந்தாதி சிலேடை வெண்பா திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம் தில்லை அந்தாதி கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.சோமசுந்தரப்புலவர் இயற்றிய நாடகம் உயிரிளங்குமரன்