lundi 30 décembre 2013

மனித மூளை

                     மனித மூளை 

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:- 

மனித மூளையும் அதன் செயல்திறனும் 

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 
... 
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும். 3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை. 

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது. 

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது. 

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும். 

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும் 

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும். 

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள். 

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம். 11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு. 

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும் 

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும். 

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம். 

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்: 

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

 5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளைபாதிப்படையும். 

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

திங்கள்கிழமை


dimanche 29 décembre 2013

சுப்பிரமணியபாரதியார்

பாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882

தமிழின் தலைமகன்களில் ஒருவரான பாரதியைக் 
கொண்டாடுவோம்

ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது 
நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் 
கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான 
தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். 
கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று 
ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் 
வாவா…’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற 
உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் 
நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் 
பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள். 
அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் 
வழியாகவும் உறவு கொள்கிறார்.

பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், 
பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்பு 
களிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ 
கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்க
வில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். 
அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ 
வரிகள் இல்லை என்றால், ஊழல் வழக்குகள் 
உள்ளிட்டவற்றில் கைதாகும் அரசியல்வாதிகள் என்ன 
செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடிய
வில்லை.இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, 
அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் 
களஞ்சியமாக பாரதி இருப்பது, எந்த அளவுக்கு நம் 
சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக அவர் 
இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.ஆனால், பாரதி 
அவ்வளவு மட்டுமா? உண்மையான பாரதியை, 
அதாவது முழுமை பெற்ற (அல்லது முழுமையை 
முயன்ற) பாரதியை அறிந்துகொள்ள நாம் இன்னும் 
கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிரு
க்கிறது. இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதி
தான் என்ன?’ என்ற கேள்வி வரும்.

"சுடர் விடும் சொல்"ஒரே ஒரு சொல்லைத் 
தேடியவர்தான் பாரதி. ‘சொல் ஒன்று வேண்டும். தேவ 
சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் 
வேண்டும்’ என்று தவம் கிடந்தவர் தான் பாரதி. 
எதற்காக அந்த ஒரு சொல்லைத் தேடினார்? அந்த 
ஒரு சொல்தான் என்ன?அந்தச் சொல் உண்மையில் 
சொல் அல்ல; சுடர். ‘சொல்லில் விளங்கும் சுடரே 
சக்தி’ என்று பாரதி சொன்னது அதனால்தான். 
நவமெனச் சுடர் தரும் உயிரில் பாரதி அந்தச் 
சொல்லைக் கண்டுகொண்டார். சொல்லைச் சுடராக்கி 
அதில் உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் தீ 
மூட்டினார். அப்படித் தீ மூட்டாமல் பாதுகாப்பாக 
இருந்திருந்தால் வெறும் ‘குடும்பஸ்தன்’ கவியாகவே 
பாரதி மிஞ்சியிருப்பார். ‘புலன்களைக் குலைத்துப் 
போடும்’ விபரீத விளையாட்டின் மூலம் தன் 
உச்சபட்சக் கவித்துவத்தைச் சாதித்துக்கொண்ட 
பிரெஞ்சுக் கவிஞன் ரைம்போவைப் போலத்தான் 
பாரதியும்.நிலவொளிப் பாடகன் இத்தாலியக் கவிஞன் 
லெப்பர்டியின் கவிதைகுறித்து இதாலோ கால்வினோ 
இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘அவர் கவிதைகளில் 
அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் 
சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத்தட்ட நிலவொளி
போல் ஆக்கிவிடுகிறார்.’ இது பாரதியின் கவிதை
களுக்கு முற்றிலும் பொருந்தும். பாரதியின் பல 
கவிதைகளை அர்த்தங்களுக்காக ரசிப்பதைவிட, 
கார்த்திகை அகல்போல அவை விடும் அமைதியான 
சுடருக்காக நாம் ரசிப்பதே அதிகம்.

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’என்ற பாடலை அது
சொல்லும் பிரபஞ்ச ஒருமைக்காக ரசிப்பதைவிட, 
அதன் கவித்துவ அமைதிக்காகத்தான் அதிகமாக 
ரசிக்கிறோம். பிய்த்துப் பிய்த்து அர்த்தம் காண 
முயலும்போது அந்தப் பாடல் தன் அழகை 
இழந்துவிடும், அதன் அர்த்தம் ஆழமானது 
என்றாலும்கூட. இந்தப் பாடலின் அழகே அர்த்தத்தை 
சொற்களின் வழியாக இல்லாமல் உணர்வின் வழியாக 
நமக்கு ஊட்டுவதுதான். புத்தரின் சாந்தமான முகம் 
நமக்கு உணர்த்துவது போன்றது இது. இதை 
உணர்ந்துகொள்ளும்போது பாரதியின் முக்கியமான, 
அறுதிப் பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். 
இந்த இடத்தில் நமக்கு இரண்டு வகையான பாரதி 
கிடைக்கிறார். விட்டு விடுதலையாகத் துடிக்கும் 
பாரதியும் பிரபஞ்ச ஒருமை காணும் பாரதியும். 
உண்மையில், இந்த இரண்டு பாரதிகளுமே 
ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களே. எனவே, 
விட்டு விடுதலையானதால் பாரதியால் பிரபஞ்ச 
ஒருமையைக் காண முடிந்தது என்றும் சொல்லலாம்.

ஞானியும் பித்தனும்பிரபஞ்ச ஒருமையைக் 
காணும்போது ஒரு பக்கம் ஞானிபோலவும் 
இன்னொரு பக்கம் பித்தன் போலவும் ஆகி
விடுகிறார் பாரதி. ஞானியின் குரலுக்கு வசன 
கவிதைகள் சாட்சியாவதைப் போல, பித்தனின் 
குரலுக்கு ‘ஒளியும் இருளும்’,‘ஊழிக் கூத்து’,‘காளி’ 
போன்ற கவிதைகளும், பாஞ்சாலி சபதத்தில் வரும் 
மாலை வருணனையும் சாட்சியாகின்றன.

பாஞ்சாலி சபதத்தில், அமைதியான மாலைப் 
பொழுதை பாஞ்சாலியுடன் ரசித்துக்கொண்டிருக்கும் 
அர்ஜுனனுக்கு ஒவ்வொரு கணமும் காளி கவிதை 
செய்வதாகப்படுகிறது. திடீரென்று, அர்ஜுனனுக்குள் 
பாரதி புகுந்துகொள்ள, பிதற்ற ஆரம்பிக்கிறான் 
அர்ஜுனன்:

“பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி
விட்ட வோடைகள்! - வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! - பாரடீ!
நீலப் பொய்கைகள்! - அடடா, நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! - கரிய பெரும் பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! - காணடி யாங்கு
தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! - ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!”

அமைதியான குளத்தின் மீது பெருமழை வீழ்ந்து 
குளத்தின் மேற்பரப்பைத் தத்தளிக்க வைப்பதுபோல் 
மொழியைத் தத்தளிக்க வைக்கிறார் பாரதி. மொழி 
பதறுகிறது; சாமியாடுகிறது. அர்த்தங்கள் மொழியை 
விட்டு ஓட, திகைப்பே அர்த்தமாகிறது. அந்தத் 
தத்தளிப்பை அப்படியே முன்வைக்கிறார் பாரதி. ‘நீல 
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!’ என்று 
படிக்கும் போது, அடடா! அடடா! என்று பதற 
வைக்கிறாரல்லவா பாரதி. எப்படிப்பட்ட இயற்கை 
உபாசகர் அவர்!இயற்கையை காளியின் நடனமாகப் 
பார்த்தவர் பாரதி,அதனால்தான்,‘அத்தனை கோடிப் 
பொருளினுள்ளே நின்று வில்லை யசைப்பவளை - 
இந்தவேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியை’
என்று காளியைப் பாடுகிறார். சொற்கள் எப்படித் 
தாண்ட வமாடுகின்றன! குறிப்பாக, ‘வினைச்சி’
என்ற சொல்லைப் பாருங்கள். பாரதியைத் தவிர, 
வேறு யார் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்க 
முடியும்?

பிரபஞ்ச ஒருமை
இன்னொரு உருவம் அமைதியான பாரதி. “வேதம், 
கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -இவை ஒரு 
பொருளின் பல தோற்றம். உள்ளதெல்லாம் ஒரே 
பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர் ‘தான்’ ” என்று 
சொல்லும் பாரதி. இதுதான் பிரபஞ்ச ஒருமை என்பது.
விட்டு விடுதலையாகாமல், பிரபஞ்ச ஒருமை 
காண்பது சாத்தியம் இல்லை. எவ்வளவு சுமைகளைத் 
தாங்கிக் கொண்டு திரிகிறோம்! குடும்பம், குடும்ப 
அட்டை, ஓட்டுநர் உரிமம், பாலிசி, தேர்தல்கள், 
தெரு, மொழி, இனம், தேசம், எல்லைக் கோடுகள்,
போர்கள்... எவ்வளவு ஒழுங்குகள்! எல்லாமே கடமை
களாகி நம் மேல் சுமை கவிந்துவிட்டது. ஒருவர் 
இவ்வளவு சுமைகளையும் சுமந்துகொண்டு கலந்து 
கொள்ளும் ஓட்டப் பந்தயத்தின் பெயர்தான் 
வாழ்க்கை என்றாகிவிட்டது.பாரதி இந்தச் சுமை 
தூக்கும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள 
விரும்பவில்லை. ‘விட்டு விடுதலையாகி’ 
சிட்டுக்குருவியைப் போல ‘எட்டுத் திசையும் பறந்து’ 
திரிந்து, ‘மட்டுப்படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் 
இவ்வானொளியென்னும் மதுவின் சுவையை’ 
உண்ணவே விரும்பினார். இதற்காகச் செய்ய 
வேண்டியதெல்லாம் ஒன்றே, ஒரு தொழிலே என்கிறார்:

“யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.”
அன்பு எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும். இதுதான் 
பாரதி இந்த உலகுக்கு அளிக்கும் செய்தி. இதனால்
தான் பாரதி நம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் 
உலகத்துக்குமே கவியாகிறார்.

ஞாயிற்றுக்கிழமை


lundi 23 décembre 2013

கல்பனா சௌலா,







விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது.

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனைகல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 1961ம் ஆண்டு யூலை1 திகதி, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பின்னர், 1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.1988ம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல்இல் சி.எஃடி ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

1995ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது.

பின்னர், 2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது.

‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.

திங்கள்கிழமை