samedi 24 août 2013

கல்பனா சௌலா




 கல்பனா சௌலா

கல்பனா சௌலா 1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் .

சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.கர்னாவில் உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த கல்பனா சண்டிகாரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் 1982 ல் இளங்கலை பட்டம் பெற்றார்.1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலை கழகத்தில் அதே பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்தார்.

எளிய மொழியில் விளக்குவதற்கு சிரமமான சில ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.1993 ல் கல்பனா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார்.ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

கல்பனா.1995 ல் பயிற்சி முடிந்து வின்வெளி வீராங்கணையாக தகுதி பெற்றார். அவரது முதல் வின்வெளி பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ந்தேதி தொடங்கியது. ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம். அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார்.

டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்

கல்பனா.முதல் வின்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது. முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003 ஆம் ஆண்டு சனவரி 16 ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர். பிப்ரவரி முதல் தேதிவரை அந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 80 அறிவியல் ஆராய்ட்சிகளை அவர்கள் நடத்தினர்.

அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது. கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது.

கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து. அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போய்விட்டது . ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை வாழ்ந்து காட்டினார் கல்பனா. இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியாதா?

வானத்தை கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. நாம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா. கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை


samedi 3 août 2013

jeudi 1 août 2013

சுப்பிரமணியபாரதியார்


1.பாரதியார் 1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி  திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார்.

2.இவருடைய பெற்றோர் பெயர் சின்னசாமி, இலட்சுமி அம்மையார் ஆகும் .

3.இவருக்கு இவருடைய பெற்றோர் சூட்டிய பெயர் சுப்பிரமணியன் ஆகும்

4.ஆனால் இவருடைய செல்லப்பெயர் சுப்பையா ஆகும்.

5.இவர் தமது ஐந்தாம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.

6.  இவரது  11வது வயதில் (1893ம் ஆண்டு)  எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ்சபையில் உள்ள புலவர்கள்  இவருடைய  புலமையை கேட்டு வியந்து இவருக்கு ‘பாரதி’ (கலைமகள்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.

7.அன்று முதல் இவர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப் பெற்றார்.

8.இவருடைய பதினோராம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்தது.

9.இவருடைய மனைவியின் பெயர் செல்லம்மாள் ஆகும் .

10. 1898-1902 வரை இவர் காசியில் அத்தை குப்பம்மாளுடன் வசித்து வந்தார்.

11.அப்பொழுது இவர் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

12.இவர் காசி இந்து பாடசாலையில் சமற்கிருதமும், இந்தியும் பயின்றார்.

13.அதன் பின்னர் இவர் 1902ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் வந்து வசித்தார் .

14.மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு என்னும் இதழில் தனிமை இரக்கம் என்ற தலைப்பில் இவருடைய முதல்பாடல் அச்சேறியது.

15.1904 முதல் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் ‘இந்தியா’ என்ற வார அத்துடன் இவர் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

16.சுதேசகீதம், நாட்டுப் பாடல், விடுதலைக் கும்மி எனப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் காட்டுபவராகவும், தீவிர அரசியல்வாதியாகவும் விளங்கினார்.

17. தமது தீவிரமான கருத்துகளைச் சுதேசமித்திரனில் வெளியிட முடியாததால் சக்கரவர்த்தினி என்ற இதழைத் தொடங்கினார்.

18.ஆங்கிலேயர் அவரைக் கைது செய்ய முயன்றதால் அவர் புதுச்சேரிக்குச் சென்றார்.

19.பின்னர் தமிழகம் திரும்பினார். கைதும் ஆகி, விடுதலையானார்.

20.சென்னையில் அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டம் அமைந்தது.

21.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையிடம் அன்பு காட்டிப் பழகி வந்தார்.

22.மதம் பிடித்திருந்த அந்த யானை அவரைத் துதிக்கையால் தூக்கி எறிந்தது.

23.காயமடைந்த பாரதியார் சிறிது சிறிதாகத் தேறினார்.

24.பிறகு நோய்வாய்ப்பட்டிருந்து 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் அவர் மறைந்தார்.

வியாழக்கிழமை